Thursday 2nd of January 2025 07:35:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
புதுமையான ராப்பெரி திரில்லர் படமாக ரசிகர்களை கவர வருகிறது “வட்டகரா” திரைப்படம்!

புதுமையான ராப்பெரி திரில்லர் படமாக ரசிகர்களை கவர வருகிறது “வட்டகரா” திரைப்படம்!


IMF Creations சார்பில் சதீஷ் தயாரித்து நடிக்க, இயக்குநர் K பாரதிகண்ணன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “வட்டகரா”. ஒரு ராப்பெரியையும் அதனை சுற்றிய நான்கு பேரின் வாழ்வையும் பற்றிய படம் தான் வட்டகரா. ஒரு புதுமையான கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

செந்தில், தருண், மணி, மாதவன் ஆகிய நால்வரும் ஒரு பயணத்தில் சந்திக்கிறார்கள். அவரவர் கதைகளை பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள் அவர்கள் அனைவரின் பிரச்சனைக்கான ஒரே தீர்வு வட்டகரா. வட்டகராவை திருட திட்டமிடுகிறார்கள், அவர்கள் அதில் ஜெயித்தார்களா?, அவர்கள் பிரச்சனை தீர்ந்ததா?, என்பதே இப்படத்தின் கதை. காதல், காமெடி, ஆக்சன், திரில்லர் அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக, ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபர திரில்லராக ஒரு புதுமையான அனுபவத்தை இப்படம் தரும்.

மதுரை, திருச்சி, சென்னை என மூன்று மாநகர் பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் நான்கு பாடல்களும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் சதீஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அங்காடித் தெரு மகேஷ், சரணேஷ் குமார், கண்ணன் மாதவன், ஆகியோர் இணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா மோனு, அலீஷா ஜார்ஜ், நாயகிகளாக நடித்துள்ளனர். சம்பத்ராம், கஜராஜ், பெஞ்சமின், தினேஷ், அரவிந்த், R.S.சிவாஜி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் - சதீஷ்

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்- கே.பாரதி கண்ணன்

இசையமைப்பாளர் - தாஜ் நூர் ஒளிப்பதிவாளர்- ஜேசன் வில்லியம்ஸ்

படத்தொகுப்பு - அமர்நாத்

கலை இயக்குனர் - ஸ்ரீ கிருஷ்ணன்

பாடல் வரிகள்- கபிலன், சினேகன், இளையகம்பன், நிமேஷ்.

பாடகர்கள்- மில்லினியம் பிரபு, ஸ்ரீ கணேஷ், பிரியா மல்லி, ஜித்தின், தீபர்.

மக்கள் தொடர்பு - ம்பி ஆனந்த்

டிஜிட்டல் பிர் - அஹ்மத் அஸ்ஜத்

Crowni Cinimas சார்பில் ஜெயந்தினி கோவிந்தராஜன் இப்படத்தினை வழங்க, Screen focus Pvt Ltd நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 5 முதல் உலகமெங்கும் வெளியாகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE